Monday, 11 August 2014

சுதந்திரம் பெற்று விட்டோமா?



வருசத்தில் ஒரு நாள் சுதந்திரமாம்!
இவிங்க அடிக்கிர கூத்து சகிக்கலை,
வசதியில்லாதவனுக்கு சுதந்திரமோ,,
இன்னும் வாய்பேச்சு அளவுதான்னு புரியலை…..


பள்ளிக் கூடத்தில கொடியேத்தி,
என் பாட்டன் அடிமையா இருந்தான்னு,,
மிட்டாய் கொடுத்து சொல்லி கொடுங்க…

பட்டி தொட்டியெல்லாம் திறந்திடுங்க,,
பாட சாலைகள் தான் அறிவு வளரக்க,,
அந்நிய மொழிதான் அங்க சொல்லிக் கொடுங்க!….

படிச்ச படிப்புக்கு வேலையில்லை,,
நம்மபள அடமானம் வச்சிதான் சம்பாதிக்க,,
நாளை தேடி போகனும் வெளிநாட்டுக்கு,,
அதுக்கு ஆங்கிலம் கத்துகறது அவசியமே தானுங்க…..
சுதந்திரம் வாங்கித்தான் நாம என்ன கிழிச்சோம்?!
தாய்மொழி மறந்தே ஆங்கிலம் படிச்சோம்....

வித்து கட்டுங்க அடுக்கு மாடிதான்,
விவாசயம் பண்ணித்தான் என்னத்த கண்டோம்?
நாளை அரிசிக்கும் அடுத்தவன் காலைபிடிப்போம்,,
அந்நிய முதலீடுனு துள்ளிக் குதிப்போம்…..

என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்/?
ஏன் இன்னும் வருமை ஒழியலை நம்நாட்டில்?
வயத்து பசிக்கி இங்க ஒருத்தன் திருடினா,,
பிடிச்சி முட்டிய பேக்குது போலீசு!
குடும்பம் குடும்பமா கொள்ளையடிச்சான்,,
இன்னும் கோர்ட்டுல கிடக்கிது அவன் கேசு……

காவி உடைய ஒருத்தன் கட்டிக்கிட்டு,,
கட்டில் வேட்டைதான் நடத்துறான்....
அவன் ஆண்மை சோதிக்க தடையிட்டு,,
இங்க மூச்சு வாங்குறது நம் தேசம்தான்...

சொந்த மதத்துல பொறப்போம்,,
செத்தவனை தேவனாக துதிப்போம்,,
பிறந்த மதத்தை நாம மறப்போம்,,
கேவலப்படுத்திக்கிட்டு திரிவோம்…

பெத்த தாய மதிக்காம,,
பிறந்த மதத்தை துதிக்காம,,
அடுத்தவனுக்கு விலைபேசி,,
நம்ப நிலத்தையும் வித்துபுட்டு,,
அவன் பிச்சை காசுக்கு,,
கை கட்டி ஊழியம் செய்வோம்….

இரத்தம் சிந்தித்தான் சுதந்திரத்தை,,
பெற்றுத் தந்தாங்க தலைவர்கள் தான்......
பெற்றுத் தந்த சுதந்திரத்தை
நாம விட்டுக் கொடுக்கிறோம் அடுத்தவனுக்கு…..

No comments:

Post a Comment