
சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது.
முதல் உலகப் போரின் முடிவில் ஆட்டமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன் பின்பு பிறந்த நவீன காலத் துருக்கி ;பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தது. இது லாசன் ஒப்பந்தம் எனப்படும்.
1917-ல் பிரிட்டன் பால்பூர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து “பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாய் நாடு என்று அறிவித்தது” . 1922-ல் பாலஸ்தீனப் பகுதியின் 80 சதவீதத்தை ட் ரான்ஸ் ஜோர்டான் வசம் அளித்தது. ஜோர்டான் தான் பாலஸ்தீனத்தின் அரபுப் பகுதி யாகும்.
பாலஸ்தீன வாசிகள் யூதர்கள், அரபுகள், ஜோர்டான் வாசிகள் எல்லோருமே பாலஸ்தீனர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.
யூதர்கள் தமது வரலாற்று வசிப்பிடமான ஜூடியா , சமாரியா பகுதிகளில் குடியேறிய பின்பு தான் அரபு பாலஸ்தீன தேசம் என்ற மாயை ஸ்தாபிக்கப் பட்டு பிரச்சாரம் செய்யப் பட்டது. பாலஸ்தீனம் என்று ஒரு மொழியோ, பாலஸ்தீனம் என்ற நிலப் பரப்போ என்றும் இருந்ததில்லை. பாலஸ்தீன அரசும் என்றும் இருந்ததில்லை. இன்றைய பாலஸ்தீனர்கள் அரபுக்களே. அரேபியாவின் மற்ற அரபு மக்களிடமிருந்து இவர்கள் எந்த விதத்திலும் தனித் தன்மை கொண்டவர்கள் அல்ல. இவர்களின் கலாசாரமும் அரபுக் கலாசாரமே.
இவர்களில் பலரும் சென்ற 100 வருடங்களில் இங்கு குடியேறியவர்களே. இஸ்ரேலின் உருவாக்கம் பொருளாதார வளர்ச்சியை இந்தப் பகுதிக்குக் கொண்டு வந்தது. இதில் பலனடைய பலரும் இந்தப் பகுதிக்கு வந்தனர். 100 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி ஜனத்தொகையும் சொற்பமே. யூதர்கள் பெரும்பான்மையும், அரபுகள் சிறுபான்மையாகவும் ,இருந்தனர். ஓஸ்லோ ஒப்பந்தம் வரையில் இஸ்ரேல் பகுதியில் தான் அரபுகள் நல்ல வேளையில் இருந்தனர். இப்போதும் கூட பல அரபுகள் இஸ்ரேலுக்கு குடியேறி வாழ விரும்புகின்றனர்.
பாலஸ்தீன அத்தாரிடியின் தலைவர் அராபத் கூட “பாலஸ்தீனர்” அல்ல. எகிப்தில் பிறந்தவர். பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை. இன்றும் அரபுப் பகுதியாகத் தான் அறியப் படுகிறது. இந்த அரபுப் பகுதி இஸ்ரேலைப் போல 660 மடங்கு பரப்பளவு கொண்டது. ஜனத்தொகை அடர்த்தியும் அவ்வளவாய் இல்லை.
இன்று இஸ்ரேல் மீது சொந்தம் கொண்டாடுவது இஸ்ரேலின் அழிவையே முதன்மையான நோக்கமாய்க் கொண்டது. இஸ்லாமியப் பரப்புதலின் ஓர் அங்கம் தான் இந்த எதிர்ப்பு.
****
இந்த இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையை உலகு முழுதுமான முஸ்லிம்களின் பிரசினையாக ஆக்குவதில் இஸ்லாமிய அரசியல் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸில் யூதர்களுக்கு எதிரான வன்முறை தொடங்கியுள்ளது. பிரான்ஸின் கத்தோலிக்க மதச் சார்பு எப்போதுமே யூத எதிர்ப்பை தன்னுள் கொண்டது. அதன் கோர முகம் மீண்டும் வெளிப்படத் துவங்கியுள்ளது.
யூதர்களை அல்ல நாங்கள் ஜியோனிசத்தைத் தான் எதிர்க்கிறோம் என்று வாதம் செய்பவர்கள் உண்டு தான். இது போன்ற வறட்டு வாதங்கள் தமிழர்களுக்குப் புதிதல்ல. பிராமணர்களை எதிர்க்க வில்ல பிராமணீயத்தை தான் எதிர்க்கிறோம். என்று சொல்லப்பட்டதுண்டு. அதன் உண்மையை எல்லோரும் அறிவோம்.
**************
No comments:
Post a Comment