Thursday, 28 August 2014

பெற்றோர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான அலைபேசி மென்பொருள் (Apps) பயன்பாடுகள்.

நாட்டில் அனேகமாக முக்கால்வாசி குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன் என்னும் அலைபேசி தவழ்கிறது.
குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வைத்து கொள்ள வேண்டுமானால் பெற்றோர்கள்  அவர்களின் தொலைபேசியை கண்காணித்தல்  வேண்டும்.
குழந்தைகள் பயன்படுத்தும் சில மென்பொருள் (Apps)  ஆபத்தான  மென்பொருள் என்னும் விடயம் அச்சுறுத்தக் கூடியது தான்.
தொழில்நுட்ப விழிப்புணர்வில்  பின்தங்கி இருக்கும் பெற்றோர்களை மிகவும் எளிதில் ஏமாற்ற இக்கால குழந்தைகள் துணிகின்றனர்.குழந்தைகள் பதிவிறக்கும் எல்லா மென்பொருள்களும்  (Apps) நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள பயன்படும் எளிய வழி என்று நிறைய பெற்றோர்கள் நம்பி விடுகிறார்கள்.
அவற்றின் பயன்பாடுகள், உரைகள் (text), படங்கள் எல்லாவற்றையும் அவசியம் கண்காணித்தல்  வேண்டும். அவர்கள் தங்கள் அந்தரங்கத்தை பெற்றோர்கள் தோண்டுகிறார்கள் என்று கோபம் அடையலாம், ஆனால் பெற்ற குழந்தைகளை நெருப்பில், ஆபத்தில், அழிவில் இருந்து காப்பாற்ற நல்ல பெற்றோர்கள்  என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தயக்கம் தேவையில்லை.  எனவே, நீங்கள் உங்கள் குழந்தை தொலைபேசியை கண்காணிக்கத் தவறாதீர்கள்,  விழிப்புடன் இருக்க வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள  ஏழு ஆப்ஸ் பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
Yik Yak (இக் யாக் ) – இந்த  மென்பொருள் புதிய, மேலும் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். 200 எழுத்துக்கள் உரை மட்டுமே யாக்கர்கள் பதிவு செய்ய அனுமதிக்கிறது. யாக் எழுதிய நபருக்கு நெருக்கமாக இருக்கும் ஐநூறு யாக்கர்கள் இதை பார்க்க முடியும்.
இச்செய்தி பகிர்வு  ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம்  நிர்ணயிக்கப்பட்டு  பின் நெருக்கமாக இருக்கும் ஐநூறு யாக்கர்களுக்கு பகிரப்படுகிறது.
குழந்தைகள் வெகுவில் சகசமாக  வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் நிறைந்த, தவறான மொழியை மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை மிகவும் கடுமையாக பதிவு செய்கிறார்கள். அறிமுகம்  இல்லாதவர் (anonymous posts) அனுப்பும் அநாமதேய பதிவுகள் என்றாலும் நாளடைவில் தயக்கம் இன்றி அந்தரங்கங்களைப் பகிர்ந்து ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள். நிறைய பள்ளிகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SnapChat  (சனாப் சாட்) – இந்த பயன்பாட்டில் பயனர்கள் அனுப்பும் புகைப்படங்கள் பத்து  விநாடிகள் கழித்து மறைந்துவிடும். பெறுநர் படத்தை திறக்கும் நொடி முதல் காலத்தை பதிவு செய்யும் கடிகாரம் தொடங்குகிறது. பின்னர் பத்து விநாடிகளில் புகைப்படம் அனுப்புநர் தொலைபேசி மற்றும் பெறுநரின் தொலைபேசியில் இருந்து மறைந்துவிடும். எனினும், பெறுநர் அப்புகைப்படத்தை ஒரு புகைப்பட பிம்பம் (screen shot) எடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பயன்பாட்டின் மூலம் குழந்தைகள் பெற்றோருக்குத் தெரியாமல் “sexting” என்னும் பகிர்தலை வசதியாக செயல்படுத்துகிறார்கள்.
KiK Messenger – (கிக் மெஸ்சஞ்சர் ) – இது ஒரு தனியார் Messenger மென்பொருள்.  இந்த பயன்பாட்டை பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். குழந்தைகள் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை பெற்றோர்கள் பார்க்க முடியாது. அதை கண்காணித்து கண்டும் பிடிக்க முடியாது. இந்த மென்பொருள் (ஆப்) நம் குழந்தைகளை பாலியல் நபர்களின் வலையில் எளிதில் விழ வைக்கக் கூடிய உரையாடலை வளர்க்கும்  ஒரு கருவியாக உள்ளது.
Poof (புப்)–இந்த மென்பொருள் (ஆப்) தங்கள் தொலைபேசியில் உள்ள மற்ற மென்பொருள்களை அடுத்தவர் பார்க்க விரும்பவில்லை என்றால் அதை மறைக்கக் கூடிய வசதியுடையது.  இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்துவிட்டு ஒரு முறை திறந்து பெரியவர்கள் அடுத்தவர்களிடம் மறைக்க நினைக்கும் மென்பொருள்களை தேர்வு செய்துவிட்டால் அது மறைந்துவிடும். இதில் நல்ல விடயம் என்னவென்றால் தற்பொழுது இது நடை முறையில் இல்லை. ஆனால் இதை ஒத்த பல மென்பொருள்களை  ஆப்பிள் மற்றும் கூகிள் ஆப் ஸ்டோர் தயாரித்து அடிக்கடி அழித்துவிடும்.Omegle(ஒமேகல்) – இது  2008ல் இருந்தே பயன்பாட்டில் உள்ளது. இங்கு நம்மைப் பற்றி தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்.
எனினும் ஒத்த நலன்களை அக்கறை கொண்ட அரட்டை கூட்டாளிகளைக் கண்டு முகநூல்  கணக்கைஒமேகலில் இணைக்க முடியும். அப்படி இணைத்துவிட்டால் இந்த மென்பொருள் ஒத்த விருப்புடைய அறிமுகம் இல்லாத அந்நியர்களிடம் நம்மை பொருத்த முயற்சி செய்யும். இது  குழந்தைகளை  பொறுத்தவரை பாதுகாப்பான முறை இல்லை. அந்நியர்களிடம்  பேசி அந்தரங்க தகவல்களை கயவர்களிடம் குழந்தைகள் பகிரகூடும், இது ஆபத்தான செயல்.
Whisper (விஸ்பர்) – இந்த மென்பொருள் (Apps) இரகசியங்களை வெளியிட, பகிர பயனர்களை ஊக்குவிக்கிறது. பயனர்களை பெயர் வெளியிடாமல் பகிர அனுமதிக்கிறது, ஆனால் ஒரு மைல் சுற்றளவில் இருந்து வெளிவரும் உள்ள தகவல் பகிர்வுகளின் பதிவர்களை கண்டுகொள்ள முடியும்.  இந்த மென்பொருள் மூலம் ஆன்லைன் உறவுகளை மழைக் காளான் போல் இன்று அதிகம் காண்கிறோம். ஆனால்  கணினி அல்லது அலைபேசி பின்னால் உள்ள நபர் நம்பகத்தன்மை எத்தகையது என்று தெரியாது எனினும் அந்தரங்க செந்த கதைகளை எல்லாம் முகம் தெரியாதவர்களிடம் பகிர்ந்து விடுவர் குழந்தைகள். வாசிங்டனில் உள்ள ஒரு மனிதன், கடந்த ஆண்டு இந்த பயன்பாட்டை உபயோகித்து சந்தித்த ஒரு பன்னிரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான்.
Down (டவுன்)–   இந்த பயன்பாடு Bang with Friends என்றும் அழைக்கபடும், முகநூலில் இணைக்கப்பட்டுள்ளது. “இரவு நேர நண்பர்களை கண்டுபிடிக்க  எளிய, வேடிக்கையான  வழி.” என்பதே இதன் தாரக மந்திரம். பின் விவரிக்கவும் வேண்டுமா? குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்ட  பெற்றோர்களுக்கு.
இறுதியாக முடிந்தவரை குழந்தைகளின் கைபேசிகளை பெற்றோர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது நன்மை. இதன்  விபரீதத்தை , ஆபத்துக்களைப் பற்றி குழந்தைகளிடம் தெளிவாக விவரித்து புரியவைப்பது பெற்றோர்களின் கடமை. முக்கியமாக அலைபேசிகளில்,(I PAD) ஐபேட்களில் நாம் இருக்கும் இடத்தை காட்டும் அமைப்பை (location services, or GPS) செயல்படாமல் அணைத்து வைப்பது சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment