




1930-ல் Hollywood-ல் அதிகமான western movies cow boys திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் அதிகமாக cow boys அணிந்த ஆடை ஜீன்ஸ் பின்னர் மக்களிடம் மெல்ல செல்லத் தொடங்கியது. ஜேம்ஸ் டீன் (James Dean) என்ற அமெரிக்க திரைப்பட நடிகர் நடித்த (Rebel without a cause) என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடம் அதிகமாக பரவியது இந்த ஜீன்ஸ் ஆடை.
1939-1945 -ல் இடைப்பட்ட ஆண்டில் நடந்த இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர்கள் அதிகமாக வேலை நேரத்தில் மற்றும் ஓய்வு நேரத்தில் பயன்படுத்தியது. ஜீன்ஸ் இவர்களின் மூலம் ஜீன்ஸ் பேன்ட் மற்ற நாடுகளுக்குச் சென்று அடைந்தது.

இந்த ஒரு ஜோடி நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அதன் வாழ்க்கை சுழற்சியில் 919 gallons அளவு நீர் எடுத்துக் கொள்கின்றது. 1 gallons என்பது 3.78541 லிட்டர் நீர் ஆகும். அப்பொழுது 919 gallons என்பது 3478.79 லிட்டர் நீர் எடுத்துக் கொள்கின்றது. அந்த ஒரு ஜோடி நீல நிற ஜீன்ஸ் பேன்டின் வாழ்க்கை சுழற்சி என்பது பருத்தி பயிரிடுதல், ஜீன்ஸ் தயாரித்தல், ஜீன்ஸ் சலவை செய்தல் அனைத்தையும் உள்ளடக்கியதே இந்த வாழ்க்கை சுழற்சி.
ஒரு ஜீன்ஸ் சராய் சாதாரணமாகத் தயாரிப்பதினால் ஏற்படும் இயற்கை பாதிப்பை விட அதனை “used look” ஆக தயாரிப்பதில் அதிகமாக இயற்கையை பாதிக்கின்றது. எப்படி என்றால் அதனை தயாரிக்க பயன்படும் ரசாயனங்களினால் ஏற்படுகின்றது. இயற்கையை மட்டும் பாதிக்கவில்லை அதில் வேலை செய்யும் மனிதர்களையும் பாதிக்கின்றது. (Sandblasting and treating with sandpaper has the risk of causing silicosis to the workers). துருக்கியில் 5000 த்திற்கும் மேற்பட்ட ஜவுளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்கள். இந்நோயால் மற்றும் சிலர் இறந்தும் போயினர். சில ஜவுளி தொழிற்சாலைகள் இந்த Sandblasting-யை தடையும் செய்துள்ளது.

ஜீன்ஸ் பேன்ட்டின் கற்சலவை (stone washed’ என்று அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த கல்லால் (stone) ஆனது மெருகேற்றல் [pumice stone] இதுவும் இயற்கையைப் பெரிதும் பாதிக்கின்றது.
இவ்வாறு செயற்கை வேதியியல் பொருட்களினால் உருவாக்கப்படுகின்ற ஜீன்ஸ் ஆடையானது மறுசுழற்சி செய்வது கடினம் மற்றும் இதன் இயற்கை சிதைவும் [Degrade]-ம் எளிதாக நடைபெறுவதும் இல்லை எனவே பழைய ஜீன்ஸ் ஆடைகளை பயன்படுத்த, முடிந்த அளவு பயன்படுத்திய பின் அதனை பயன்படுத்த முடியாத சூழலில் அதனை வெளியே எறியாதீர்கள் அதனையும் இயற்கையை பாதிக்கும் சில கழிவுகளை மண்ணில் புதைத்து அழிப்பதை போன்று அழிக்கவும்.
ஜீன்ஸ் ஆடையை மற்று தேவையில்லா கழிவில் இருந்து உருவாக்கினால் பயன்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் மறுசுழற்சி செய்து மீண்டும் ஜீன்ஸ் உருவாக்க முடியும்.

ஜீன்ஸ் ஆடையை பருத்திக்கு மாற்றாக hemp-ல் இருந்து உருவாக்க முடியும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி மற்றும் இந்த hemp ஆனது உலகில் எல்லா இடங்களிலும் சிறப்பாக வளரக்கூடியது மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற மருந்தும் தேவையில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக வடக்கில் உள்ள நாடுகளிடம் இந்த hemp- தவறான பெயர் பெற்றுவிட்டது. (ஏன் எனில் hemp plant ஆனது கஞ்சாவில்(marijuana) இருந்து வருகின்றது என்ற காரணத்தினால் இருந்தும் USA-ல் சில நிறுவனங்கள் இதில் இருந்து ஜீன்ஸ் உருவாக்குகின்றது.

ஜீன்ஸ் துணியைப் பருத்தியினால் உற்பத்தி செய்வதினால் அதிகமான தீமைதான் விளைகின்றது. பருத்தி உலகில் உள்ள மற்ற இயற்கை இழையை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. மற்றும் செயற்கை இழையையும் அதிகமாக பருத்தியுடன் இணைக்கப்படுகின்றது. பருத்தி விளைச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 1,000,000 பூச்சிக்கொல்லி மற்றும் நீர் பயன்படுத்தப்படுகின்றது. பருத்தி விளைச்சலுக்காக அதிகமான நீர் மற்றும் பூச்சிக்கொல்லிகள் [pesticides], களைக்கொல்லிகள் [herbicides], உரங்கள் [Fertilizers] தேவைப்படுகின்றது.
பருத்தி விளைவதற்கு அதிகமான வளமான நிலமும் வேண்டும். இதனை உணர்ந்த அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் வளரும் மற்றும் கீழ்நாடுகளிடம் உள்ள வறுமையைப் பயன்படுத்தி இந்தப் பருத்தியை பயிரிட ஊக்கப்படுத்துகின்றது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அங்கேயே நிறுவனங்களை அமைத்து ஜீன்ஸ் ஆடையை உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.
கீழ்க்கண்ட வட்டத்திலுள்ள நாடுகள் எல்லாம் பருத்தியை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும் விளக்கப்படம்.
இந்த நாடுகளில் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பருத்தியை விளைச்சலின் பொழுது அதிகமான செயற்கை பூச்சிகொல்லிகளை பயன்படுத்துகின்றனர்கள். அந்த பூச்சிக்கொல்லிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற எந்த முன் எச்சரிக்கையும் அறியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை தங்கள் வீட்டின் படுக்கை அறை அல்லது சமையல் அறைகளில் வைக்கின்றனர்கள். வீட்டில் உள்ள காற்றினை சுவாசிக்கும் பொழுது அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்கள். பூச்சிக்கொல்லி மருந்தை பயிர்களில் தெளிக்கின்ற பொழுது முகத்தில் எந்த முன்பாதுகாப்பும் இன்றி பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லிமருந்து பயன்படுத்திய கலன்களில் நீர் பருகுகின்றனர் இவைகளின் மூலம் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் சரியான வழிமுறைகளைச் சொல்லி கொடுப்பதின் மூலம் பாதிப்புகளைச் சிறிது குறைக்கலாம்.
உலகில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 5% விளைச்சல் நிலம் பருத்தி விளைச்சலுக்கு பயன்படுகின்றது. இந்த சுமார் 5% நிலத்தில் உணவு உற்பத்தி செய்தால் இன்று உலகில் உணவுக் கிடைக்காமல் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைத்துவிடும். உலகில் உணவு இல்லா மக்களே இல்லா நிலையை அடைய முடியும். இனியாவது அடிமையின் ஆடையைச் சிந்தித்துப் பயன்படுத்துவோம்.
No comments:
Post a Comment