Saturday, 30 August 2014

1971- போரை விட கடுமையாக உள்ளது இப்போதைய சண்டை! - ராணுவ அதிகாரி.



ஜம்மு: 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை விட மிகக் கடுமையாக உள்ளது இப்போதைய எல்லைச் சண்டை என்று தெரிவித்துள்ளார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக்.

கடந்த 2 வாரங்களாக ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்.

27-army-border34-600.jpg

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 3 இந்திய ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு துளைத்து காயமடைந்துள்ளனர்.

27-army-border-600.jpg

ஆர்.எஸ்.புரா உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாகிஸ்தான் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீசி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் காரணமாக சுமார் 3000 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பேட்டியளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக், "தற்போது எல்லையில் நடந்து வரும் சண்டை மிக கடினமாக உள்ளது. கடந்த 1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போருக்கு பிறகு இதுபோன்ற ஒரு சண்டையை நான் பார்க்கவில்லை," என்று தெரிவித்தார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

தனிக்கட்சி தொடங்குகிறார்.... நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!

30-1409375549-rajini43-600.jpg

தனிக்கட்சி தொடங்குகிறார்.... நடிகர் ரஜினிகாந்த்!
பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!

சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மோடி சந்திப்பு.
லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார்.
 
அமித்ஷா பேச்சுவார்த்தை.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்க வலியுறுத்தினார். பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டு தரப்பிலும் இருந்தும் சரி.. அரசியலில் குதித்தால் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

கருணாநிதிக்காக..
அதாவது திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

ஆக்டிவ்வாக இருக்கப்போவதில்லை.
இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம்.
 
பாஜகவில் சேர வேண்டாம்.
அதே நேரத்தில் பாஜக அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்பதும் ரஜினியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
 
தனிக்கட்சிதான் சரி.
தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம்.

ஆமோதிக்கும் ரஜினி.
ரஜினிகாந்தும் இதுதான் சரியான ரூட்டாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.

நன்றி தற்ஸ்தமிழ்.

30-1409375536-rajini2323-600-jpg.jpg

அடிமையின் ஆடை- ஜீன்ஸ் சராய்

அடிமையின் ஆடை ஒன்றை இன்றைய உலகில் நாகரீகம் என்று நாம் நினைத்துக் கொண்டு அனைவரும் அணிந்து மகிழ்கிறோம். இந்த ஆடையை  அன்று அடிமையாக இருந்த தொழிலாளர்கள், தங்களின் பணியிடமான தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வேளாண்மை தோட்டத் தொழில் போன்ற பணிகளைச் செய்யும்போது பயன்படுத்தினர். அன்று இவர்கள் அணிந்த அந்த ஆடையானது இன்று நாகரீகம் என்ற பெயரில் அந்த அடிமைகளின் ஆடையை அணிந்துகொண்டு தானும் ஒரு அடிமை என்பதை நிகழ்கால மனிதர்கள் நினைவு படுத்தி வருகின்றனர். அதுதான் இன்று நாம் அதிகம் விரும்பி பயன்படுத்துகின்ற ஜீன்ஸ் (Jeans Pant) எனப்படும் தார்ப்பாய் போன்ற உறுதியான துணியாகும்.
இந்த ஜீன்ஸ் பேன்ட், ஜீன்ஸ் என்ற பெயர் இத்தாலியில் உள்ள ஜெனோவா (Genoa) என்ற இடத்தில் இருந்த அடிமைத் தொழிலாளர்கள் அணிந்த ஆடையில் இருந்து வந்தது. 18-ம் நூற்றாண்டில் அடிமை வியாபாரம் அதிகமாக இருந்தது. அதில் மனிதர்களை அடிமையாக்கித் தொழிலாளர்களாகப் பயன்படுத்தினர். அந்தக் காலகட்டத்தில் பருத்தி வேளாண்மையும் அதிகமாக இருந்தது. இந்தப் பருத்தியில் இருந்து அடிமைகளுக்குக் கிழியாத உறுதியான ஆடை உருவாக்கப்பட்டது.
19-ம் நூற்றாண்டில் 1848-ல் கலிஃபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டறியப்பட்டது. அந்தச் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கிழியாத உறுதியான ஆடை உருவாக்கப்பட்டது. அந்த ஆடை உற்பத்தியில் இண்டிகோ டை நிறமி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த இண்டிகோ டை அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது.
1851-ம் ஆண்டில் லியோப் ஸ்ட்ரஸ்(Leob straus)ஜெர்மனில் இருந்து நியூயார்க் (New York) -ல் சென்று உலர்ந்த பொருட்கள் கடை நடத்தி பின் 1853-ம் ஆண்டு (New York) -ல் இருந்து San Francisco சென்று அங்கு மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு அவரின் நண்பர்  Jacob Davis என்ற ஆடை தைப்பவரின் சில ஆலோசனைகளின் மூலம் பழைய ஜீன்ஸ் பேன்ட்டில் சில மாற்றங்கள் செய்து 1873 -ல் தொழிலாளர்களின் சிறந்த உடையை தயாரித்து வெற்றி கண்டனர். பின்னர் Leob என்ற பெயர் Levi என்ற பெயருடன் உலகின் 1886 -ல் ஜீன்ஸ் ஆடை வெளிவந்தது. அதில் தோலால் செய்த Levi என்ற சிட்டை (Label) உருவாக்கப்பட்டது.
அதில் இரண்டு குதிரைகள் எதிரெதிர் திசையில் இழுத்தும் ஆடை கிழியவில்லை. உறுதியானது என்று பொருள்படும்படி விளம்பரம் செய்யப்பட்டது.
1930-ல் Hollywood-ல் அதிகமான western movies cow boys திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் அதிகமாக cow boys அணிந்த ஆடை ஜீன்ஸ் பின்னர் மக்களிடம் மெல்ல செல்லத் தொடங்கியது. ஜேம்ஸ் டீன் (James Dean) என்ற அமெரிக்க திரைப்பட நடிகர் நடித்த (Rebel without a cause) என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடம் அதிகமாக பரவியது இந்த ஜீன்ஸ் ஆடை.
1939-1945 -ல் இடைப்பட்ட ஆண்டில் நடந்த இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர்கள் அதிகமாக வேலை நேரத்தில் மற்றும் ஓய்வு நேரத்தில் பயன்படுத்தியது. ஜீன்ஸ் இவர்களின் மூலம் ஜீன்ஸ் பேன்ட் மற்ற நாடுகளுக்குச் சென்று அடைந்தது.
இந்த ஜீன்ஸ் பேன்ட் தயாரித்தலில் பயன்படும் இண்டிகோ டை (Indigo dye) ஆனது உலகின் சுற்று சூழல்களை கடுமையாக பாதிக்கின்றது. இந்த இண்டிகோ டை (Indigo dye) ஆனது இன்றைய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாக உள்ளது. எனவே இதன் தேவையை இயற்கை முறையில் செடிகளில் இருந்து பிரித்தெடுத்து கிடைக்கும் (Indigo dye) இண்டிகோ டையின் மூலம் ஈடுசெய்ய முடியவில்லை எனவே செயற்கை வேதியியல் முறையில் இந்த (Indigo dye) இண்டிகோ டையின் மூலம் தான் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் உற்பத்தி செய்யப் பயன்படும் சாயம் தயாரிக்கப்படுகின்றது. எனவே ஒரு ஆண்டில் சுமார் 20 ஆயிரம் டன் அளவு இண்டிகோ டையின் (Indigo dye) உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த ஒரு ஜோடி நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அதன் வாழ்க்கை சுழற்சியில் 919 gallons அளவு நீர் எடுத்துக் கொள்கின்றது. 1 gallons என்பது 3.78541 லிட்டர் நீர் ஆகும். அப்பொழுது 919 gallons என்பது 3478.79 லிட்டர் நீர் எடுத்துக் கொள்கின்றது. அந்த ஒரு ஜோடி நீல நிற ஜீன்ஸ் பேன்டின் வாழ்க்கை சுழற்சி என்பது பருத்தி பயிரிடுதல், ஜீன்ஸ் தயாரித்தல், ஜீன்ஸ் சலவை செய்தல் அனைத்தையும் உள்ளடக்கியதே இந்த வாழ்க்கை சுழற்சி.
ஒரு ஜீன்ஸ் சராய் சாதாரணமாகத் தயாரிப்பதினால் ஏற்படும் இயற்கை பாதிப்பை விட அதனை “used look” ஆக தயாரிப்பதில் அதிகமாக இயற்கையை பாதிக்கின்றது. எப்படி என்றால் அதனை தயாரிக்க பயன்படும் ரசாயனங்களினால் ஏற்படுகின்றது. இயற்கையை மட்டும் பாதிக்கவில்லை அதில் வேலை செய்யும் மனிதர்களையும் பாதிக்கின்றது. (Sandblasting and treating with sandpaper has the risk of causing silicosis to the workers).  துருக்கியில் 5000 த்திற்கும் மேற்பட்ட ஜவுளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்கள். இந்நோயால் மற்றும் சிலர் இறந்தும் போயினர். சில ஜவுளி தொழிற்சாலைகள் இந்த Sandblasting-யை தடையும் செய்துள்ளது.
இந்த used look ஜீன்ஸ் ஆடை செய்வதற்கு அவர்கள் அந்தத் துணியை அமிலம் மூலம் கழுவும் போது[Acid wash]  துணியானது வேதி அமிலங்களை தன்னுள் எடுத்துக்கொள்கின்றது. அந்த அமிலம் கழுவும் [Acid wash]-ல் acryl resin, pheol, a hypochlorite, potassium permanganate, caustic soda போன்றவை பயன்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமின்றி இந்த ஜீன்ஸ் பேன்ட்டில் உள்ள குடையாணிகள் [Rivets] மற்றும் இணைப்புகள், அலங்காரம் போன்றவைகள் செய்ய பயன்படுவது தாமிரம். அந்த தாமிரம் பெறுவதிலும், சுத்திகரித்தல் பயன்படுத்துதல் போன்றவைகளின் மூலம் இயற்கையை பெரிதும் மாசுபட வைக்கின்றது.
ஜீன்ஸ் பேன்ட்டின் கற்சலவை (stone washed’ என்று அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த கல்லால் (stone) ஆனது மெருகேற்றல் [pumice stone] இதுவும் இயற்கையைப் பெரிதும் பாதிக்கின்றது.
இவ்வாறு செயற்கை வேதியியல் பொருட்களினால் உருவாக்கப்படுகின்ற ஜீன்ஸ் ஆடையானது மறுசுழற்சி செய்வது கடினம் மற்றும் இதன் இயற்கை சிதைவும் [Degrade]-ம் எளிதாக நடைபெறுவதும் இல்லை எனவே பழைய ஜீன்ஸ் ஆடைகளை பயன்படுத்த, முடிந்த அளவு பயன்படுத்திய பின் அதனை பயன்படுத்த முடியாத சூழலில் அதனை வெளியே எறியாதீர்கள் அதனையும் இயற்கையை பாதிக்கும் சில கழிவுகளை மண்ணில் புதைத்து அழிப்பதை போன்று அழிக்கவும்.
ஜீன்ஸ் ஆடையை மற்று தேவையில்லா கழிவில் இருந்து உருவாக்கினால் பயன்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் மறுசுழற்சி செய்து மீண்டும் ஜீன்ஸ் உருவாக்க முடியும்.
இந்த ஜீன்ஸ் ஆடை உற்பத்தியினால் இயற்கை மட்டுமல்லாது அதனை பயன்படுத்தும் மனிதர்களையும் வெகுவாக பாதிக்கின்றது. ஜீன்ஸ் ஆடையை இந்தியா போன்று வெப்பமிகுதியான நாடுகளில் உள்ளவர்கள் உடலில் இறுக்கமாக அணியும் ஆண்கள் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்து அதனால் அவர்களின் உயிர் செல்கள் இறந்துவிடுகின்றது எனவே அவர்கள் மலட்டுத்தன்மை அடைகின்றனர்கள்.
ஜீன்ஸ் ஆடையை பருத்திக்கு மாற்றாக hemp-ல் இருந்து உருவாக்க முடியும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி மற்றும் இந்த hemp ஆனது உலகில் எல்லா இடங்களிலும் சிறப்பாக வளரக்கூடியது மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற மருந்தும் தேவையில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக வடக்கில் உள்ள நாடுகளிடம் இந்த hemp- தவறான பெயர் பெற்றுவிட்டது. (ஏன் எனில் hemp plant ஆனது கஞ்சாவில்(marijuana) இருந்து வருகின்றது என்ற காரணத்தினால் இருந்தும் USA-ல் சில நிறுவனங்கள் இதில் இருந்து ஜீன்ஸ் உருவாக்குகின்றது.
கெம்ப் யூனியன் (Hemp union) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள வாசகம் ஆனது “If you try to smoke the garment you will get nothing but an awful headache. Save the planet”. இந்த நிறுவனம் சீனாவில் இருந்து செயல்பட்டு அங்குள்ள சில நிறுவனங்களின் தொழிலாளர்களின் ஆடையை உற்பத்தி செய்கின்றது.
ஜீன்ஸ் துணியைப் பருத்தியினால் உற்பத்தி செய்வதினால் அதிகமான தீமைதான் விளைகின்றது. பருத்தி உலகில் உள்ள மற்ற இயற்கை இழையை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. மற்றும் செயற்கை இழையையும் அதிகமாக பருத்தியுடன் இணைக்கப்படுகின்றது. பருத்தி விளைச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 1,000,000 பூச்சிக்கொல்லி மற்றும் நீர் பயன்படுத்தப்படுகின்றது. பருத்தி விளைச்சலுக்காக அதிகமான நீர் மற்றும் பூச்சிக்கொல்லிகள் [pesticides], களைக்கொல்லிகள் [herbicides], உரங்கள் [Fertilizers] தேவைப்படுகின்றது.
பருத்தி விளைவதற்கு அதிகமான வளமான நிலமும் வேண்டும். இதனை உணர்ந்த அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் வளரும் மற்றும் கீழ்நாடுகளிடம் உள்ள வறுமையைப் பயன்படுத்தி இந்தப் பருத்தியை பயிரிட ஊக்கப்படுத்துகின்றது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அங்கேயே நிறுவனங்களை அமைத்து ஜீன்ஸ் ஆடையை உற்பத்தி செய்து தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.
பருத்தி வரக்கூடிய நாடுகளாவன.
கீழ்க்கண்ட வட்டத்திலுள்ள நாடுகள் எல்லாம் பருத்தியை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும் விளக்கப்படம்.
இந்த நாடுகளில் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பருத்தியை விளைச்சலின் பொழுது அதிகமான செயற்கை பூச்சிகொல்லிகளை பயன்படுத்துகின்றனர்கள். அந்த பூச்சிக்கொல்லிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற எந்த முன் எச்சரிக்கையும் அறியாமல் பூச்சிக்கொல்லி  மருந்தை தங்கள் வீட்டின் படுக்கை அறை அல்லது சமையல் அறைகளில் வைக்கின்றனர்கள். வீட்டில் உள்ள காற்றினை சுவாசிக்கும் பொழுது அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்கள். பூச்சிக்கொல்லி மருந்தை பயிர்களில் தெளிக்கின்ற பொழுது முகத்தில் எந்த முன்பாதுகாப்பும் இன்றி பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லிமருந்து பயன்படுத்திய கலன்களில் நீர் பருகுகின்றனர் இவைகளின் மூலம் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் சரியான வழிமுறைகளைச் சொல்லி கொடுப்பதின் மூலம் பாதிப்புகளைச் சிறிது குறைக்கலாம்.
உலகில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 5% விளைச்சல் நிலம் பருத்தி விளைச்சலுக்கு பயன்படுகின்றது. இந்த சுமார் 5% நிலத்தில் உணவு உற்பத்தி செய்தால் இன்று உலகில் உணவுக் கிடைக்காமல் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைத்துவிடும். உலகில் உணவு இல்லா மக்களே இல்லா நிலையை அடைய முடியும். இனியாவது அடிமையின் ஆடையைச் சிந்தித்துப் பயன்படுத்துவோம்.

Friday, 29 August 2014

39 மனைவிகளையும் 160 குடும்ப உறுப்பினர்களையும் கொண்ட நபர்

சியோனா (ziona) என்ற நபர் கடந்த ஜூலை 21ம் திகதி தனது 67வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இவர் 160 பேர் கொண்ட ஒரு பெரும் குடும்பத்தை தலைமை தாங்கி, மிசோரம் (Mizoram) ஐச் சேர்ந்த பக்டவ்ங் ட்லன்ஞோம் (Baktawng Tlangnuam) என்ற ஒரு கிராமத்தில் நான்கு மாடிக் கட்டிடத்தில் தனது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களோடும் வாழ்ந்து வருகிறார். 
இவருக்கு 39 மனைவி மார்கள் இருப்பதோடு, அவர்கள் 31 வயதிற்கும் 71 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். மேலும் இவருக்கு 5 இலிருந்து 50 வயது வரை குழந்தைகள் தற்போது இருக்கின்றார்கள்.


இவருக்கு கள் குவாரி, தளபாட வேலைத்தளம் மற்றும் வேறு சில நிறுவனங்களும் சொந்தமாக இருப்பதோடு, இவரின் மகன் மாறும் மகள் மாறுமே அதில் வேலை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களது நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கப் பெறுகின்றது. 

தற்பொழுது அவரது குடும்பத்தில் 59, 12 வயதிற்குக் குறித்த குழந்தைகளும் 101 வயது வந்தவர்களும் உள்ளடங்குவார்கள். 

நான் ஒண்ணுமே சொல்லப் போறதில்ல. நீங்களே முடிவு செய்றது நல்லது..என்ன பண்ணலாம்?


[மேலும் படிக்க ]

Thursday, 28 August 2014

People Take On The "Makeup Transformation" Photo Trend With A Hilarious Twist

We know that many women transform themselves every day with makeup, but now men are getting in on the action, too. Except, these makeup transformations are starting to look a little different…
You can find more of these hilarious #makeuptransformations on Instagram and Twitter.
H/t: BuzzFeed