Monday, 1 September 2014

இரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.
பக்கவாதம் (Stroke)
இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.
இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
(மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
(மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல்130 – 13985 – 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1140 – 15990 – 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2160 – 179100 – 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3180 – க்கு மேல்110 – க்கு மேல்
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:    நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.
    உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.
இரத்த கொதிப்பை குறைக்க
  1. குறைந்த இரத்த அழுத்தம்.
  1. பால்.
  2. பூண்டு
பால்
பால்
பூண்டு
பூண்டு

இரத்த கொதிப்பு குறைய

  1. நெல்லி வற்றல்.
  2. பச்சைப்பயிறு.

இரத்த அழுத்தம் கட்டுப்பட

  1. அகத்தி கீரை.
  2. சுண்டவத்தல்.

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட

  1. கறிவேப்பிலை.
  2. எலுமிச்சைச்சாறு.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை
எலுமிச்சைச்சாறு
எலுமிச்சைச்சாறு
கறிவேப்பிலை சாறு
கறிவேப்பிலை சாறு

குறைந்த இரத்த  அழுத்தம் கட்டுப்பட

  1. ஜடமான்சி வேர்.
  2. கற்பூரம்.
  3. இலவங்கப்பட்டை.

கொழுப்பு குறைய

  1. நெல்லிக்காய்.
  2. சீரகம்.
  3. பூண்டு.
  4. சின்ன வெங்காயம்.
சின்னவெங்காயம்
சின்னவெங்காயம்
பூண்டு
பூண்டு
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நன்றி:- Rtn. Dr. S. முரளி, M.D.S

No comments:

Post a Comment