Sunday, 30 November 2014

உலகின் முதல் மனிதன் தமிழன்!

தமிழே உலகத்தாய் மொழி என்று தேவனேய பாவாணார் கூறுகிறார். தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி. தமிழர் நாகரிகமே உலகின் முதல் நாகரிகம். தமிழனே உலகின் முதல் மனிதன். அது எவ்வாறு எனக் காண்போம்.
தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அது அனைவருக்கும் கண்கூடாக்த் தெரிந்த ஒன்றே. தமிழின் மூன்றாம் தமிழ்சங்கம் மதுரையில் இயங்கியது. அதன் தலைவராக மாங்குடி மருதனார் சிலகாலம் இருந்தார். திருக்குறள் மூன்றாம் தமிழ்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட காலம் கி.மு.300. சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன்!. உலகின் முதல் ஹைக்கூ கவிதை இயற்றப்பட்டது தமிழகத்தில் 2300 ஆண்டுகளுக்குமுன். அதற்குமுன்பே வெண்பா, ஆசிருயப்பா, என இலக்கணம் வகுத்து வைத்துள்ளனர்.
மூன்றாம் தமிழ் சங்கம் இருந்த காலம் 2500முன், இரண்டாம் தமிழ்சங்கம் இருந்த இடம் கபாடபுரம் எனக்கூறப்படுகிறது. அந்நகரம் தற்போதய கன்னியாகுமரிக்கு அப்பால் தென் திசையில் இருந்ததுவாம்.அச்சங்கம் நிலவிய காலம்? சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் என வைத்துக்கொள்வோமா? இது ஒரு குறைந்தபட்ச அளவீடுதான், சரி முதலாம் தமிழ்சங்கம் நிலவிய காலம்? குரங்கிலிருந்து முதன்முதலாக மனிதன் உருவான காலம் என மேலை நாட்டு அறிவியல் கூறும் காலத்திற்கு முற்பட்டது போல உங்களுக்கே தெரிகிறதா?
அண்மையில் கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல அரசியல் விளையாட்டுகளுக்கு மத்தியில் சில நல்ல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றில் ஒன்று பாரத வரலாற்றின் முதற்படியாகத் திகழும் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களடங்கிய சிந்துசமவெளி நாகரிகமும் நம் தமிழ் நாகரிகமும் ஒன்றே என மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. அங்ஙனமாயின் சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்களே!
மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் களின் வழியாக சிந்து சமவெளிக்குள் வந்தவரள் ஆரியர்கள். ஆரியர்களின் வருகைக்குப்பின் சிந்துசமவெளி நாகரிகம் சீரழிந்தது. சிந்துசமவெளியில் நாம் பேசிய தமிழோடு ஆரியர்களின் நாடோடி மொழியும் இணைந்து சம்ஸ்கிருதம் என்ற வடமொழி உருவானது. ஆக பாரத மொழிகளில் பண்டைய(பழைய) மொழி தமிழே. பாரத நாட்டின் முதல் நாகரிகம் தமிழ் நாகரிகமே!
உலகவரலாற்றில் அதிசயமாகப் போற்றப்படுவதும், பழமையானதுமாகத் திகழ்வது பிரமிடுகளால் பிரமிக்க வைத்த எகிப்தியர் நாகரிகம். பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நாகர்கள் என்ற சொல் பல இடங்களில் காணக்கூடும். தமிழ் இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நாகர்களுக்கும் எகிப்து பிரமிடுகளில் இருக்கும் மம்மிகளின் உருவங்களுக்கும் அவ்வளவு வேறுபாடுகளில்லை. தமிழர்கள் எகிப்துநாட்டினருடன் வாணிபத்தொடர்பு வைத்திருந்ததால் இவர்கள் நாகர்கள் எனக்குறிப்பிடும் எகிப்தியர்களைப்பற்றி தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது!.
ஆனாலும் அவர்களை விட தமிழர்களே சிறந்த, மேன்மையுற்றவர்களாகத் திகழ்ந்துஇருந்திருக்கின்றனர். ஒரு சிறிய உதாரணம் நாகர்கள் உடை அணியாதவர்கள்!
ஆக தமிழே உலகின் தலைசிறந்த பழ்மையான் மொழி, நாகரிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
இப்படிப்பட்ட தமிழ்குடியில் பிறந்த தமிழர்களைக் கேட்கிறேன், அந்நிய மொழியைக் கொண்டாடுவதற்கும், அவர்தம் நாகரிகத்தைப் பின் பற்றுவதற்கும் உனக்கு வெட்கமாய் இல்லையா?

1 comment:

  1. Super post on Types of Sentences and it's framed so well even though it's in Tamil language. Great job.

    ReplyDelete