Sunday, 30 November 2014

உலகின் முதல் மனிதன் தமிழன்!

தமிழே உலகத்தாய் மொழி என்று தேவனேய பாவாணார் கூறுகிறார். தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி. தமிழர் நாகரிகமே உலகின் முதல் நாகரிகம். தமிழனே உலகின் முதல் மனிதன். அது எவ்வாறு எனக் காண்போம்.
தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அது அனைவருக்கும் கண்கூடாக்த் தெரிந்த ஒன்றே. தமிழின் மூன்றாம் தமிழ்சங்கம் மதுரையில் இயங்கியது. அதன் தலைவராக மாங்குடி மருதனார் சிலகாலம் இருந்தார். திருக்குறள் மூன்றாம் தமிழ்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட காலம் கி.மு.300. சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன்!. உலகின் முதல் ஹைக்கூ கவிதை இயற்றப்பட்டது தமிழகத்தில் 2300 ஆண்டுகளுக்குமுன். அதற்குமுன்பே வெண்பா, ஆசிருயப்பா, என இலக்கணம் வகுத்து வைத்துள்ளனர்.
மூன்றாம் தமிழ் சங்கம் இருந்த காலம் 2500முன், இரண்டாம் தமிழ்சங்கம் இருந்த இடம் கபாடபுரம் எனக்கூறப்படுகிறது. அந்நகரம் தற்போதய கன்னியாகுமரிக்கு அப்பால் தென் திசையில் இருந்ததுவாம்.அச்சங்கம் நிலவிய காலம்? சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் என வைத்துக்கொள்வோமா? இது ஒரு குறைந்தபட்ச அளவீடுதான், சரி முதலாம் தமிழ்சங்கம் நிலவிய காலம்? குரங்கிலிருந்து முதன்முதலாக மனிதன் உருவான காலம் என மேலை நாட்டு அறிவியல் கூறும் காலத்திற்கு முற்பட்டது போல உங்களுக்கே தெரிகிறதா?
அண்மையில் கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல அரசியல் விளையாட்டுகளுக்கு மத்தியில் சில நல்ல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றில் ஒன்று பாரத வரலாற்றின் முதற்படியாகத் திகழும் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களடங்கிய சிந்துசமவெளி நாகரிகமும் நம் தமிழ் நாகரிகமும் ஒன்றே என மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. அங்ஙனமாயின் சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்களே!
மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் களின் வழியாக சிந்து சமவெளிக்குள் வந்தவரள் ஆரியர்கள். ஆரியர்களின் வருகைக்குப்பின் சிந்துசமவெளி நாகரிகம் சீரழிந்தது. சிந்துசமவெளியில் நாம் பேசிய தமிழோடு ஆரியர்களின் நாடோடி மொழியும் இணைந்து சம்ஸ்கிருதம் என்ற வடமொழி உருவானது. ஆக பாரத மொழிகளில் பண்டைய(பழைய) மொழி தமிழே. பாரத நாட்டின் முதல் நாகரிகம் தமிழ் நாகரிகமே!
உலகவரலாற்றில் அதிசயமாகப் போற்றப்படுவதும், பழமையானதுமாகத் திகழ்வது பிரமிடுகளால் பிரமிக்க வைத்த எகிப்தியர் நாகரிகம். பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நாகர்கள் என்ற சொல் பல இடங்களில் காணக்கூடும். தமிழ் இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நாகர்களுக்கும் எகிப்து பிரமிடுகளில் இருக்கும் மம்மிகளின் உருவங்களுக்கும் அவ்வளவு வேறுபாடுகளில்லை. தமிழர்கள் எகிப்துநாட்டினருடன் வாணிபத்தொடர்பு வைத்திருந்ததால் இவர்கள் நாகர்கள் எனக்குறிப்பிடும் எகிப்தியர்களைப்பற்றி தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது!.
ஆனாலும் அவர்களை விட தமிழர்களே சிறந்த, மேன்மையுற்றவர்களாகத் திகழ்ந்துஇருந்திருக்கின்றனர். ஒரு சிறிய உதாரணம் நாகர்கள் உடை அணியாதவர்கள்!
ஆக தமிழே உலகின் தலைசிறந்த பழ்மையான் மொழி, நாகரிகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
இப்படிப்பட்ட தமிழ்குடியில் பிறந்த தமிழர்களைக் கேட்கிறேன், அந்நிய மொழியைக் கொண்டாடுவதற்கும், அவர்தம் நாகரிகத்தைப் பின் பற்றுவதற்கும் உனக்கு வெட்கமாய் இல்லையா?

Saturday, 8 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)



பர்த்வான் குண்டு வெடிப்பு படம்
பர்த்வான் குண்டு வெடிப்பு படம்
மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏ-வா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன
பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன
பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டசென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி
ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி
கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும்இதற்கும் உள்ளதொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].
பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்
பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்
கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
பர்த்வான் சோதனை -nia
பர்த்வான் சோதனை -nia
சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.
பர்த்வான் கைது என்.ஐ.ஏ
பர்த்வான் கைது என்.ஐ.ஏ
அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு
பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு
சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

Friday, 7 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)



Abdul Hakim alias Hassan at Burdwan hospital.
Abdul Hakim alias Hassan at Burdwan hospital.
குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர்.  அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.
Hasan Molla - burdwan-blast
fbgtHasan Molla – burdwan-blast
தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;
Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.
Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan. Courtesy – twocircles
டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:
  • 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
  • 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
  • எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
  • ரசாயனப் பொருட்கள் [chemicals],
  • குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
  • சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
  • எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].
இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.
Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast.
Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles
மதரஸாவில் குண்டுகள்ஆயுதங்கள் முதலியவை எப்படிஇருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –
  • காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
  • கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
  • பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
  • ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
  • குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, "How To Die A Good Death"],
முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு  புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும்  நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7].  மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.
பர்கா பேக்டரி - கடை
பர்கா பேக்டரி – கடை
இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.

Thursday, 6 November 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)


Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph
Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph
பர்த்வான் குண்டுவெடிப்பும், மேற்கு வங்காள போலீஸாரின் நடவடிக்கையும்: காந்தி ஜெயந்தியான 02-10-2014 அன்று மேற்கு வங்காளத்தில் பர்த்வான் என்ற இடத்தில் கரக்கர் என்ற வீட்டில் குண்டு தயாரிப்பின் போது, யதேச்சையாக வெடித்ததில் 2 பேர் – ஷகீல் அஹமது காஜி [ Shakil Ahmed Gazi in Beldanga, Murshidabad] மற்றும் சோவன் மண்டல் [Sovan Mandal] கொல்லப்பட்டனர். இவ்விடத்தில் 90% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்[1]. அதாவது, அவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துதான் வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. குண்டுவெடிப்பில் மேலும் செயிக் ஹகீம் காயமடைந்தான். கௌஸர் மற்றும் அப்துல் கலாம் என்பவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் அந்த இடம், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்தது. அதிலுருந்து நடந்து செல்லும் தூரத்தில் இன்னும் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு, அங்கும் தீவிரவாதிகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விரைவு தயாரிப்பு வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், சிம் கார்டுகள் [improvised explosive devices (IEDs), other explosives and SIM cards] முதலிய கைப்பற்றப் பட்டன. இவ்வீடுகள் பாபுகர் மற்றும் பாத்சாஹி தெருக்களில் உள்ளன[2].  இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் தெரிந்தது, யாரும் குண்டு வைத்து, இப்படி இறக்கவில்லை, ஆனால், வெடி குண்டு தொழிற்சாலையில், யதேச்சையாக குண்டு வெடித்ததில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது, என்பது தெரிந்தது.
Burdwan_blast_building_
Burdwan_blast_building_
மேற்கு வங்க பொலீஸார் ஆதாரங்களை அழித்தனரா?: வெடி குண்டு தொழிற்சாலை என்றவுடன் போலீஸார், மேலிடத்தில் அறிவித்திருக்கலாம், அரசியல்வாதிகள் ஆதரவு-தொடர்பு என்றிருப்பதால், அது மறைக்கப் படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். இதன் தீவிரத்தை ஆயும் முன்னரே, மேற்கு வங்காள போலீஸார் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்பின. குறிப்பாக, குண்டுவெடித்த இடத்தில் உள்ள ஆதாரங்கள் திரட்டப் படவேண்டும், வெடிக்காமல் உள்ள குண்டுகள் ரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆராயப் பட வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம், அந்த வெடிகுண்டுகளை யார் தயாரித்திருக்கக் கூடும், உபயோகப் படுத்தப் பட்ட பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும் போன்ற விவரங்கள் அறிந்து கொள்ல ஏதுவாகும். ஆனால், உடனே, ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காத அளவிற்கு குண்டுவெடித்த இடத்தை உள்ளூர் போலீஸார் சுத்தப் படுத்தி விட்டனர். கிடைத்த குண்டையும் வெடிக்கவைத்ததால், அதைப் பற்றிய ஆதாரங்கள் அறியமுடியவில்லை. மேற்கு வங்காள போலீஸார் வேண்டுமென்றே செய்ததாக தெளிவாகிறது.
Razia Bibi and Alima Bibi
Razia Bibi and Alima Bibi
கைது செய்யப் பட்டவர்கள்அவர்களைப் பற்றிய விவரங்கள்: சம்பந்தப் பட்ட விசயத்தில் இரண்டு பெண்கள் – ரஜிரா பீபி என்கின்ற ரூமி (Rajira Bibi alias Rumi) மற்றும் அமீனா பீபி (Amina Bibi) தொடர்பு கொண்டிருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு முறை குண்டுகளை [Improvised explosive device (IED)] எடுத்துச் சென்று தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கீழ் கண்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்:
  1. செயிக் ஹகீம் என்கின்ற ஹஸான் சாஹப் [Sheikh Hakim alias Hasan Saheb from Lalgola in Murshidabad district, who was injured in the blast]
  2. ஹாவிஸ் மொல்லா [Hafez Mollah alias Hasan], காயமடைந்தவர்களுள் ஒருவன்.
  3. ரஜிரா பீபி என்கின்ற ரூமி [Rajira Bibi alias Rumi, widow of the suspected terriost Shakil Ahmed who died in the blast] – ஷகீல் அஹமதின் மனைவி.
  4. அமீனா பீபி [Amina Bibi, Hasan Saheb's wife] – ஹசான் சாஹபின் மனைவி.
பர்த்வான் - கைது செய்யப் பட்டவர்கள்
பர்த்வான் – கைது செய்யப் பட்டவர்கள்
சம்பந்தப் பட்டுள்ளவர்களின் மற்ற விவரங்கள்:
ஷகீல் அஹமது: இவன் பங்களாதேசத்தைச் சேர்ந்தவன். ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் என்ற ஜிஹாதி அமைப்பின் தீவிரவாத வேலையாள். 2006ல் இந்தியாவுக்கு வந்து கரீம்பூர், நாடியா மாகாணம் என்ற இடத்தில் தங்கியவன். மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் என்பவரை சந்தித்தான். அவருடைய மாமா பெண் – ரஜிரா பீபியை திருமணம் செய்து கொண்டான். அவளின் தந்தையை, தனது தந்தையாக – அடையாளமாக வைத்துக் கொண்டு ரேஷன் கார்டையும் பெற்றான். பேடங்கா (மூர்ஷிதாபாத்)வில், ஒரு பர்கா (முஸ்லிம் பெண்களுக்கு பர்தா போன்றவற்றை விற்கும்) கடையினையும் வைத்துக் கொண்டான்.

எஸ்.கேகௌஸர் – தேடப்பட்டு வரும் முக்கியமான குற்றவாளி. சிவப்பு நிற பதிவு செய்யப் படாத பைக்கை உபயோகப்படுத்தியவன்.  ஷகீலுக்கு உதவி செய்து, கரக்கர் வீட்டில் வேலையை ஆரம்பித்து வைத்தவவன். இவன் தான் ஷகீல் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ்  இடையே தொடர்பாளனாக வேலை செய்து வந்தவன்.

அப்துல் கலாம் – ஷகீலின் பர்கா கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன், கூட்டாளி.

அமீனா பீபி – ஹகீமின் மனைவி. சென்னை-மூவருடன் தொடர்பு கொண்டவள்.

ஹஸன் மொல்லா – புர்பஸ்தலி என்ற இடத்தில் உள்ள ஷூ – காலணி வியாபாரி. ஷகீலுடன் தொடர்பு கொண்டுள்ளவன். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அவனை ஏழு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். செப்டம்பர் 2 மற்றும் 10 2014 தேதிகளில் ஷகீலுடன் அதிக நேரம் பேசியுள்ளான். பர்த்வானில் உள்ள ஷகீலின் வீட்டிற்கு வந்துள்ளான்.

மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் – நாடியாவில், கரிம்பூரில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு. உள்ளூர் மதரஸாவின் காரியதரிசி. ஷகீலுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டைக் கொடுத்தவர், தனது மைத்துனியான ரூமியையும் திருமணம் செய்து கொடுத்தார். பிறகு அவனுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்தார். முர்ஷிதாபாதில் இஸ்லாமிய ஆன்மீகத்தைத் தூண்டிவரும் மௌல்வியாக இருக்கிறார்.
கௌஸர் முதலியோர்
கௌஸர் முதலியோர்
வெடிகுண்டு வெடித்த வீடுமற்ற வீடுகளில் சோதனை: குண்டுவெடித்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒரு வீடியோவில், தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரித்து, வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என்ற காட்சியும் உள்ளது. தவிர அவர்களது ஜிஹாதி பிரச்சார இலக்கியங்களும் இருந்துள்ளன. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தைத் தாக்கும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3]. இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு பர்கா கடை மற்றும் தொழிற்சாலை உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வேண்டிய பர்தா போன்ற ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால்,ஆங்கிருந்த பெண்களே குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபயோகப் படுத்தப் பட்டது, ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. அப்பெண்கள் கொடுத்த விவரங்களை வைத்து மேலும் விசாரணை தொடர்ந்தது. இதைத்தவிர அசாமில் ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014
The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014 – Courtesy – twocircles
மேற்கு வங்காள போலீஸாரின் அறிக்கை: ஏற்கெனவே, இப்பிரச்சினை அரசியல் ஆக்கப் பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது: “பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன.  ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா. பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்[5].